ஊரக உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் மூதாட்டிகள். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக 80 வயது மூதாட்டி விசாலாட்சி தேர்வானார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் மனைவி விசாலாட்சி (80 வயது) திருப்பூர் மேட்டுபாளையம் ஊராட்சி தலைவராக தேர்வானார்.
அதே போல
தூத்துக்குடி: திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேஸ்வரி, வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். அங்கு பதிவான 13 ஓட்டுகளில் 10 ஓட்டுகள் பெற்று, ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகி உள்ளார்.
கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றார்.
* திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி மன்றத் தலைவி தேர்தலில் போட்டியிட்டு 22 வயது பிபிஏ பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார்