பாஜக தலைவர்களை விட நெல்லை கண்ணன் கீழ்தரமாக பேசவில்லை - வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம்

நெல்லைக்கண்ணனின் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்


டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைத்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நெல்லைக் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அவரைக் கைது செய்ய பாஜக அதிமுக ஆகிய கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு நெல்லை அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் அவதுறாக பேசியதற்காக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை நாங்கள் நியப்படுத்த விரும்பவில்லை ஆனால் இதே போன்று பிஜேபி தலைவர்கள் எச்.ராஜா நாயினார் நாகேந்திரன் எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பலமுறை பேசியுள்ளனர். நீதிமன்றம் குறித்து எச்.ராஜா எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதேபோன்று பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக எஸ்.வி.சேகர் பேசியபோதும் நாயினார் நாகேந்திரன் பேசியதும் இவ்வளவு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக காவல்துறை தற்போது அவசர அவசரமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணனுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என தனியார் மருத்துமனையை மிரட்டி பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கி சிகிச்சை மேற்கொண்டு வந்த நெல்லை கண்ணனை அவசர அவசர காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
தமிழக அரசு இதுபோன்ற செயல்களால் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது. ஜனநாயக குழிதோண்டி புதைக்கும் செயலை தொடர்ந்து மத்திய ஆட்சியாளர்களின் அழுத்ததால் தமிழக அரசு செய்து வருவதை ஏற்க முடியாது. ஆகவே நெல்லை கண்ணனுக்கு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்